இந்தியா

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - நடிகை ரம்யா

Published On 2025-08-19 07:41 IST   |   Update On 2025-08-19 07:41:00 IST
  • தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது.
  • தேர்தல் ஆணையம் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.

குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரம்யா, "ராகுல் காந்தி சொல்வது சரியானது. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததுகுறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News