இந்தியா
null

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் திரௌபதி முர்மு

Published On 2025-04-25 11:12 IST   |   Update On 2025-04-25 11:13:00 IST
  • போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
  • நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் போப் பிரான்சிஸின் அரசு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இத்தாலியின் வாடிகன் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.

தற்போது போப் பிரான்சிஸ் உடல்  வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.

இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள். 

Tags:    

Similar News