இந்தியா

தெலுங்கானாவில் வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

Published On 2025-09-02 14:52 IST   |   Update On 2025-09-02 14:52:00 IST
  • நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான்.
  • ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவியது.

தெலுங்கானாவில் 4 வயது சிறுவன் ரக்ஷித்தை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ரக்ஷித்தை 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்தது. நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான். அவனது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நாய் கடித்ததற்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று தெரிகிறது.

ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவி, உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

Tags:    

Similar News