இந்தியா

அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

Published On 2023-03-27 13:27 GMT   |   Update On 2023-03-27 13:27 GMT
  • எம்.பி. என்ற முறையில் அவருக்கு துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது.
  • ஒரு மாத காலத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதுடெல்லி:

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும்.

இந்நிலையில், அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், பதவியை இழந்ததில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பங்களாவில் தங்குவதற்கான அனுமதியை நீட்டிக்கும்படி வீட்டுவசதிக் குழுவிற்கு ராகுல் காந்தி கடிதம் எழுதலாம். அந்தக் கோரிக்கையை குழு பரிசீலித்து தனது முடிவை அறிவிக்கும் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News