இந்தியா

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்

Published On 2025-06-27 23:36 IST   |   Update On 2025-06-27 23:36:00 IST
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்தனர்.
  • பூரி நகர் வீதிகளில் தேர்கள் அசைந்து சென்ற காட்சியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News