இந்தியா

இந்திய முஸ்லிம்கள் அவுரங்கசீப்பின் சந்ததிகள் அல்ல - தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு

Published On 2023-06-19 21:38 GMT   |   Update On 2023-06-19 21:38 GMT
  • அவுரங்கசீப்பை முகலாய பேரரசராக இந்திய முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என்றார்.
  • மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பட்னாவிசின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா நகரில் பா.ஜ.க. சார்பில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என தெரிவித்தார். துணை முதல் மந்திரியின் இந்தக் கூற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News