டெல்லியில் செயற்கை மழை பெய்யவைக்க ரூ.3.2 கோடி செலவில் IIT கான்பூர் எடுத்த முயற்சி தோல்வி
- டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
- டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது
தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.
அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார்.