இந்தியா

தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்கிறேன்... டெல்லி மக்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்- ராகுல் காந்தி

Published On 2025-02-08 20:05 IST   |   Update On 2025-02-08 20:05:00 IST
  • டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
  • டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

டெல்லி மாநில தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் டக்அவுட் ஆகியுள்ளது.

ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி.

டெல்லியின் வளர்ச்சி, டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

காங்கிரஸ் கட்சி, "டெல்லி மாநில தேர்தல் முடிவு மோடியின் கொள்கைகளை நிரூபித்ததற்கான முடிவு அல்ல. கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீதான வாக்கெடுப்பு.

2015 மற்றும் 2020 தேர்தலில் பிரதமர் மோடியின் புகழ் உச்சியில் இருந்தபோது கெஜ்ரிவால் தீர்க்கமான வெற்றியை பெற்றார். இதனால், பிரதமர் கொள்கைளை நிரூபிப்பதைவிட, அரவிந்த் கெஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் சாதனை பற்றிய மிகைப்படுத்துதல் அரசியலை நிராகரிப்பதற்கான வாக்கெடுப்பு" எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News