இந்தியா

மேம்பாலத்தில் காரை நிறுத்தி 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த வாலிபருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

Published On 2024-03-31 08:44 GMT   |   Update On 2024-03-31 08:44 GMT
  • வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
  • ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

புதுடெல்லியின் பஸ்சின் விஹார் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் டாக்கா. இவர் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காரை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள மேம்பாலம் அருகில் சென்ற போது திடீரென காரை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மேம்பாலத்தில் அவர் கார் கதவை திறந்த நிலையில் ஓட்டி செல்வதும், ரீல்ஸ் வீடியோவுக்காக சாகசம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இது தொடர்பாக அவருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது அவர் காவல்துறையினரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் சில பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News