இந்தியா

ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு

Published On 2025-08-15 03:28 IST   |   Update On 2025-08-15 03:28:00 IST
  • வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.
  • நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

ஸ்ரீநகர்:

இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயம் அடைந்தனர் .

வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News