இந்தியா

மகாத்மா காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையான இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது

Published On 2025-10-12 12:43 IST   |   Update On 2025-10-12 12:43:00 IST
  • மகாத்மா காந்தியின் உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்
  • பூஜா ஷகுன் பாண்டே வீட்டில்முகமது பைசல் மற்றும் ஆசிப் வேலை பார்த்து வந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியிரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது  உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News