இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்- இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

Published On 2025-05-07 13:41 IST   |   Update On 2025-05-07 13:41:00 IST
  • அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தி உள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News