இந்தியா

VB-G RAM G பற்றி பொய் தகவலை பரப்புவதா? - காங்கிரஸ்-க்கு மீது சிவராஜ் சிங் சவுகான் கண்டனம்

Published On 2026-01-19 14:58 IST   |   Update On 2026-01-19 15:09:00 IST
  • VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது.
  • அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், MGNREGA திட்டத்தை காப்போம் (MGNREGA Bachao Sangram) என்ற பெயரில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 45 நாட்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் VB-G RAM G திட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பொய் கூறி வருகின்றனர் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிவராஜ் சவுகான் கூறியதாவது:-

VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி தனது சிந்தனை, சித்தாந்தம் மற்றும் லட்சியத்தை கைவிட்டுவிட்டது. சிந்தனை என்பது தேசம் முதன்மை, நாட்டின் வளர்ச்சி. VB-G RAM G கிராமங்களின் வளர்ச்சிக்கானது.

MGNREGA-ஐ சிறந்ததாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்கு சாட்சி காங்கிரஸ் அரசாங்கம் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இத்திட்டத்திற்கு செலவழித்த நிலையில், நாங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். வேலைக்கான உரிமை பறிக்கப்படும் என்ற கங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது.

100 நாட்களுக்குப் பதிலாக நாங்கள் 125 நாட்கள் வேலை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கான உரிமை மட்டுமல்ல, 12 நாட்களுக்குள் வேலைவாய்ப்பின்மைக்கான அலவன்ஸ் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். நீங்கள் பேப்பரில் உரிமையை கொடுத்தீர்கள். நாங்கள் அதை களத்தில் வலுப்படுத்தியுள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்துகளில் மட்டுமே வேலை வழங்கப்படும் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த திட்டம் அனைத்து பஞ்சாயத்திற்கும் என்ற அளவில் அமல்படுத்தப்படும் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மாநிலங்களுக்கு கூடுதல் சுமை கிடையாது, மத்திய அரசு ஏற்கனவே அதிக நிதி கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கான முதலீடு கிராமங்களில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News