இந்தியா

பிரதமர் மோடிக்கு மணிப்பூரை விட இஸ்ரேல் மீது தான் ஆவல் அதிகம்- ராகுல் காந்தி

Published On 2023-10-16 14:53 IST   |   Update On 2023-10-16 16:24:00 IST
  • மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலங்களாக பிரிந்து நிற்கின்றன.
  • பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெற்றது.

5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஜஸ்வால் சென்ற அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார்.

பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி கூறியதாவது:-

சிறு மற்றும் குறு வணிகங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டதுதான் ஜிஎஸ்டி. இது நம் நாட்டு விவசாயிகளை பலவீனப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நமது நாட்டு பிரதமரின் அபத்தமான யோசனை. பொருளாதாரம் இன்னும் மீளவில்லை.

இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பிரதமரின் உத்தியை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், அதை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம் 'அதானி'. எல்லாமே ஒரு தொழிலதிபருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான் தேசத்தின் நிலை.

மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலங்களாக பிரிந்து நிற்கின்றன. இவ்வளவு நடந்தும், மணிப்பூர் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தோன்றவே இல்லை.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என அறிவதை விட, இஸ்ரேலில் என்ன நடக்கிறது என அறிவதில்தான் பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News