இந்தியா

இது ஏன் நடந்தது தெரியுமா?: பாராளுமன்றத்தில் வண்ண புகை குண்டு தாக்குதல் குறித்து ராகுல் காந்தி

Published On 2023-12-16 13:21 IST   |   Update On 2023-12-16 13:21:00 IST
  • பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
  • இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது ஏன் நடந்தது? நாட்டின் முக்கிய பிரச்சினை வேலையின்மை. பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போனது. வேலையின்மை மற்றும் பணவீக்கம் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News