இந்தியா
ஊடுருவல்காரர்களை பாதுகாத்து, அவர்கள் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற விரும்பும் காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
- ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று, டெல்லி அரசின் 17 பொது நலத்திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக. அதன்மூலம் அவர்களுடைய உதவியோடு தேர்தலில் வெற்றிபெற விரும்புகிறது. ராகுல் பாபாவும், காங்கிரஸ் கட்சியியும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை தொடங்கியுள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை. ஊடுருவல்காரர்கள் உதவியோடு தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறார்கள். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான SIR செயல்பாட்டை பாஜக ஆதரிக்கிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.