கேரளாவில் 14 வயது தலித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்யூனிஸ்டு நிர்வாகி கைது
- சமுதாய கூட்டுறவு சங்க நிர்வாகி சதீசன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆலப்புழாவை அடுத்த சேர்தலா பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் சதீசன் (வயது 66).
இவர் அந்த பகுதியில் உள்ள சமுதாய கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இந்த சங்கத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி சென்றார்.
அங்கு சென்ற வந்த பின்பு சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறுமி படித்த பள்ளியில் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டபோது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அவரை சமுதாய கூட்டுறவு சங்க நிர்வாகி சதீசன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கம்யூனிஸ்டு நிர்வாகி சதீசன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.