இந்தியா

கேரளாவில் ஸ்டண்ட் செய்வதற்காக BMW காரை வாடகைக்கு எடுத்த 10ம் வகுப்பு மாணவர்கள்

Published On 2025-03-02 19:27 IST   |   Update On 2025-03-02 19:27:00 IST
  • பள்ளி மைதானத்தில் BMW காரில் 2 இளைஞர்கள் புழுதிபறக்க சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • இதனை பார்த்த ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கேரளாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் BMW காரை வாடகைக்கு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டாவில், பள்ளியில் பொதுத்தேர்வுக்கு முந்தைய பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் ஸ்டண்ட் செய்வதற்காக 10ம் வகுப்பு மாணவர்கள் BMW காரை ரூ.2000 கொடுத்து வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி மைதானத்தில் BMW காரில் 2 இளைஞர்கள் புழுதிபறக்க சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை பார்த்த ஆசிரியர் உடனே பள்ளியின் வாயிற்கதவை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரைப் பறிமுதல் செய்து காரை ஓட்டிய 2 இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் 2 இளைஞர்களை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.

Tags:    

Similar News