இந்தியா
கார், டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- கார் மற்றம் டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் டூ வீலர், கார்களும் அடங்கும். வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி குறைப்பால் கார், டூ வீலர் எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என கார் மற்றம் டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.