இந்தியா

வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை செய்ததாக தகவல்

Published On 2025-05-08 20:02 IST   |   Update On 2025-05-08 20:02:00 IST
  • தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சென்றனர்.
  • அப்போது நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததை கண்டனர்.

டெல்லி மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் தீப்பிடிக்க, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது.

அவரது வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளித்தது.

இந்த இரண்டையும் தலைமை நீதிபதி சஞ்சீச் கன்னா ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். இதில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News