இந்தியா

குண்டும் குழியுமான சாலையால் வெளியேறுவதாக கூறிய சிஇஓ: அரசை பிளாக்மெயில் செய்ய முடியாது என டி.கே. சிவக்குமார் பதில்

Published On 2025-09-18 18:17 IST   |   Update On 2025-09-18 18:17:00 IST
  • சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன.
  • அடுத்த ஐந்து வருடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் பார்க்க முடியாது என எக்ஸ் பக்கத்தில் பதிவு.

பெங்களூருவில் இயங்கி வரும் BlackBuck நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜேஷ் யபாஜி. இவர் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவர் தனது இணைய தள பக்கத்தில் "9 வருடமாக ORR (பெலாந்தூர்) பகுதியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இங்கு தொடர்ச்சியாக இயங்க மிகவும் கடினமாக உள்ளது. இதனால் வெளியேற முடிவு செய்துள்ளோம். பெங்களூரு சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. அதனால் என்னுடைய சக பணியாளர்கள் ஒன்வே வழியில் அலுவலகத்திற்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அடுத்த ஐந்து வருடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் பார்க்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதில் அளிக்கையில் "தொழில் பிரச்சனையாக கூட நிறுவனத்தின் இடத்தை மாற்றலாம். பெங்களூரு வழங்கும் திறமையானவர்கள் மற்றும் வசதிகளுடன் திருப்தி இல்லை என்றால், யார் வேண்மென்றாலும் வெளியேறலாம். ஆனால், அரசு மிரட்ம முடியாது. அரசை பிளாக்மெயில் செய்வது வேலைக்காது. நாம் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். இதை மனதில் வையுங்கள், யாரும் பெங்களூருவில் இருந்து வெளியேற மாட்டார்கள்." என்றார்.

Tags:    

Similar News