இந்தியா

நெருங்கும் பீகார் தேர்தல்... பல்வேறு திட்டங்களுக்காக ரூ.7,616 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு

Published On 2025-09-11 11:49 IST   |   Update On 2025-09-11 11:49:00 IST
  • நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இன்னும் சில மாதங்களில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ளது.

பீகாரில் ரூ.7,616 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News