இந்தியா

நாங்கள் யாருடைய "பி" டீம் அல்ல, தெலுங்கானா மக்களுடைய அணி: சந்திரசேகர ராவ் மகள் கவிதா சொல்கிறார்

Published On 2023-11-24 10:43 IST   |   Update On 2023-11-24 10:43:00 IST
  • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
  • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

Tags:    

Similar News