இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்: பிரதமர் மோடி
- பிரேசில் அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
- பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என்றார் .
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டி சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவில் இந்த ஆண்டு புதிய உச்சம் அடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என பதிவிட்டுள்ளார்.