இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து - 10 வீரர்கள் உயிரிழப்பு!

Published On 2026-01-22 15:38 IST   |   Update On 2026-01-22 15:38:00 IST
  • மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது.
  • வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது. அப்போது பதேர்வா - சம்பா சாலையில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆறு வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 

"தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நமது துணிச்சலான வீரர்களின் சிறந்த சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News