இந்தியா

பா.ஜ.க.-தெலுங்கு தேசம் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்- புரந்தேஸ்வரி டெல்லியில் முகாம்

Published On 2024-03-21 08:22 GMT   |   Update On 2024-03-21 08:22 GMT
  • ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
  • தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திராவில் தெலுங்கு தேசம் பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சட்டமன்ற தொகுதியான விஜயவாடா (மத்தி), மச்சிலிப்பட்டினம், குண்டூர் (மேற்கு), நெல்லூர், கதிரி, அரக்கு, மதனப்பள்ளி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது.

ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஷ்வரி, மாநில அமைப்பு செயலாளர் மதுகர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

பா.ஜ.க. மாநில தலைமை கேட்ட தொகுதிகளை ஒதுக்க சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்த வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஆந்திராவில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் சோர்வடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News