இந்தியா

பெங்களூரு விமான நிலையத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் - பாஜக எதிர்ப்பு

Published On 2025-11-10 16:39 IST   |   Update On 2025-11-10 16:39:00 IST
  • விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
  • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.

Tags:    

Similar News