மூவர்ணக் கொடியில் முகம் துடைத்த பாஜக எம்எல்ஏ.. வைரலாக வீடியோ - கொந்தளித்த காங்கிரஸ்!
- மக்களுக்கு தினமும் தேசபக்தி சான்றிதழ்களை விநியோகிக்கும் இந்த எம்எல்ஏ, மூவர்ணக் கொடியால் மூக்கைத் துடைக்கிறார்.
- வழியில் யாரோ அதை எனக்குக் கொடுத்தார்கள்.
ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில்,பேரணியில் நடந்து செல்லும் அவர் மூவர்ணக் கொடியால் முகத்தை துடைப்பது பதிவாகி உள்ளது.
காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்கர்ஹி இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "ஜெய்ப்பூர் மக்களுக்கு தினமும் தேசபக்தி சான்றிதழ்களை விநியோகிக்கும் இந்த எம்எல்ஏ, மூவர்ணக் கொடியால் மூக்கைத் துடைக்கிறார்.
மூவர்ணக் கொடியை இப்படித்தான் மதிக்கிறார்களா? தேசியக் கொடியை அவமதிப்பது கடுமையான குற்றம்" என்று தெரிவித்துள்ளார். பால்முகுந்த் ஆச்சார்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கோரியுள்ளது.
இதற்கிடையே இதற்கு விளக்கம் அளித்த பாலமுகுந்த் ஆச்சாரியா, " அது தேசியக் கொடி அல்ல, வெள்ளை மற்றும் பச்சை நிறத் துணி. வழியில் யாரோ அதை எனக்குக் கொடுத்தார்கள்.
நான் துணியை முத்தமிட்டு, மற்றொரு துணியால் வியர்வையைத் துடைத்தேன். மூவர்ணக் கொடியை எப்படி மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் சாதனைகளை மக்களுக்கு பரப்ப பாஜக நாடு தழுவிய யாத்திரை நடத்தி வரும் சூழலில் இந்த சம்பவம் சர்ச்சையாகி வருகிறது.