இந்தியா

தென் மாநிலங்கள் தேடும் சுயமரியாதை பா.ஜ.க.வுக்கு புரியவில்லை- விஜயசாந்தி தாக்கு

Published On 2024-05-18 09:47 IST   |   Update On 2024-05-18 09:47:00 IST
  • விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
  • தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது.

திருப்பதி:

நடிகை விஜயசாந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு பல மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மேலும் அரசியல் குறித்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :-

தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது. இந்த கொள்கை நீண்ட காலமாக தொடர்கிறது. இந்திய நிலப்பரப்பில் தென்னிந்திய மாநிலங்கள் தேடும் சுயமரியாதையை பா.ஜ.க. புரிந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தெலுங்கானாவிற்கு பி.ஆர்.எஸ். கட்சி தேவை இல்லை என்ற பா.ஜ.க.வினர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News