இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் பீகார் தொழிலாளி பலி

Published On 2022-08-12 11:19 IST   |   Update On 2022-08-12 14:29:00 IST
  • பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
  • துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

ஸ்ரீநகர்:

பீகார் மாநிலம் மாதே பூரா பகுதியை சேர்ந்தவர் முகமது அம்ரேஸ். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் வசித்து வந்தார். இவர் புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார்.

பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு மீண்டும் கைவரிசை காட்டி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி முகமது அம்ரேஸ் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News