இந்தியா

சரியாக பணிக்கு வராத 2,081 ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பீகார் அரசு அதிரடி

Published On 2023-10-28 03:32 GMT   |   Update On 2023-10-28 03:32 GMT
  • 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
  • 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

பாட்னா:

பீகாரில் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பள்ளிகளுக்கு ஒழுங்காக வராத 21,90,020 மாணவர்களின் பெயர்களை நீக்கியது. பெயர் நீக்கப்பட்டவர்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய 2.66 லட்சம் மாணவர்களும் அடங்குவார்கள். இதனால் ஏற்கனவே பீகார் அரசு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், அனுமதியின்றி பணிக்கு வராத 2,081 ஆசிரியர்களின் சம்பளத்தை கல்வித்துறை பிடித்தம் செய்துள்ளது. மேலும் 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News