இந்தியா

அரசியல்கட்சி பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை- தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2024-02-05 13:23 GMT   |   Update On 2024-02-05 13:23 GMT
  • எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.
  • விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களின்போது குழந்தைகளை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் பிரசார மேடைகளில் குழந்தைகளை பேசவைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது.

எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது, எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தலின் போது குழந்தைகளை எந்த விதத்திலும் பயன்படுத்துவதில் பூஜ்ஜிய தன்மையை உறுதிபடுத்த வேண்டும்.

குழந்தைகளை தங்கள் கைகளில் வைத்திருப்பது, சுமப்பது உட்பட எந்த வகையிலும் ஈடுபடுத்தக்கூடாது. வாகனத்தில் அல்லது பேரணியில், கவிதை, பாடல், பேச்சுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.

வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News