இந்தியா
பாகிஸ்தான் செய்தி, சமூக வலைத்தள சேனல்கள் மீதான தடை நீக்கம்..!
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை முன்னிட்டு பாகிஸ்தான் சேனல்கள் முடக்கம்.
- பாகிஸ்தான் பிரபலங்களின் பக்கங்களை தற்போது பார்க்க முடிகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியாவதை தடுக்க பாகிஸ்தான் செய்தி சேனல்கள், சமூக வலைத்தள சேனல்கள், பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
இந்த நிலையில் தற்போது தடையை நீக்கியுள்ளது மத்தியது. அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், பிரபலங்களின் பக்கங்களை இந்தியர்களால் பார்க்க முடிகிறது.
யூடியூப் சேனல்களான ஹம் டிவி, ஏஆர்ஒய் டிஜிட்டல், ஹர் பால் ஜியோ போன்ற சேனல்கள் தற்போது கிடைக்கின்றன.