இந்தியா

நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படைக்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா

Published On 2024-04-16 16:12 GMT   |   Update On 2024-04-16 16:12 GMT
  • சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது.
  • இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி:

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுனட்ரில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சத்தீஸ்கரில் 29 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நடவடிக்கையை தங்கள் வீரத்தால் வெற்றிகரமாக செய்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News