இந்தியா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 

கடந்த ஆட்சியில் ஊழல் செய்து விட்டு தற்போது வாக்குறுதி கொடுத்தால் யார் நம்புவார்கள்?- காங்கிரஸ் குறித்து அமித்ஷா விமர்சனம்

Published On 2022-11-06 11:22 GMT   |   Update On 2022-11-06 11:45 GMT
  • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
  • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

காங்கரா: 

வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News