இந்தியா

அமேசான் பிரைம் வீடியோவுக்கு நடுவே விளம்பரம் - பயனாளர்கள் அதிர்ச்சி

Published On 2025-05-13 19:45 IST   |   Update On 2025-05-13 19:45:00 IST
  • இதுவரை அமேசான் பிரைமில் சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம்.
  • AD-FREE ஆக வீடியோக்களைக் காண கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 சந்தா செலுத்த வேண்டும்

அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் ஓடிடிதளத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஜூன் 17ம் தேதி முதல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுவரை மாத சந்தா அல்லது வருட சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் தற்போது AD-FREE ஆக வீடியோக்களைக் காண தற்போதைய சந்தாவுடன் சேர்த்து கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 அல்லது மாதம் ரூ. 129 செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் அமேசான் பிரைம் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News