இந்தியா

காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தியை அமர்நாத் யாத்திரை வெற்றி அனுப்பும்: பரூக் அப்துல்லா

Published On 2025-06-09 21:33 IST   |   Update On 2025-06-09 21:33:00 IST
  • அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம்.
  • காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் அங்கு செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் அமைதி நிலவி வருவதாகவும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூப் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தியை நாட்டுக்கு மக்களுக்கு அனுப்பும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-

அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம். காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீருக்கு ஏற்பட்ட சேதத்தை அமைதியான அமர்நாத் யாத்திரை மூலம் குறைக்க முடியும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பாபா நக்ரியில் நடந்த வருடாந்திர ஊர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நாட்டில் அமைதி நிலவவும், நமது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கவும், நாம் கடந்து செல்லும் வெறுப்புச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News