இந்தியா
மும்பையை தொடர்ந்து டெல்லியிலும் டெஸ்லா கார் ஷோரூமை திறக்க எலான் மஸ்க் திட்டம்
- மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.
- இங்கு டெஸ்லா மாடல் Y கார்கள் 27.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்கவுள்ளது
மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் மையம் வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் தனது 2 ஆவது கார் ஷோரூமை டெல்லியில் ஜூலை இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 27.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.