இந்தியா

பிரதமர் வீட்டை முற்றுகையிட தயாராகும் ஆம் ஆத்மி: அனுமதி இல்லை என்கிறது போலீஸ்

Published On 2024-03-26 03:29 GMT   |   Update On 2024-03-26 03:29 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு.
  • அவரை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடி வீட்டிடை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.

டெல்லி மாநில முதல்வராக அரவிந்த கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு கைது செய்தது. அவரை காவலில் வைத்து விசாரிக்க ஒரு வாரம் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது கைது கண்டித்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நடத்தினால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

வருகிற 31-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம் பேரணியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பா.ஜனதா பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News