VIDEO: மருத்துவமனையின் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்... அடுத்து நிகழ்ந்த சம்பவம்
- சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென்று வாலிபர் ஒருவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பரப்பரப்பான இந்த சூழலில் அந்த வாலிபரிடம் கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தகுந்த நேரத்திற்குள் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரால் அந்த வாலிபர் பத்திரமாக காப்பாற்றப்பட்டார். மேலும், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபரின் இந்த தீடீர் தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.