இந்தியா

ஐதராபாத்தில் ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து - பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

Published On 2025-05-18 11:04 IST   |   Update On 2025-05-18 11:33:00 IST
  • தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
  • காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் அளித்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,

அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்கனவே 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் அடங்குவர்.

பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.

Tags:    

Similar News