இந்தியா

கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் 86 சதவீதம் குறைவாக பெய்த மழை

Published On 2023-09-02 05:38 GMT   |   Update On 2023-09-02 07:16 GMT
  • கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது
  • ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. மேலும் வழக்கத்தை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 42.6 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 6 சென்டி மீட்டர் மழையே பெய்துள்ளது. இது 86 சதவீதம் பற்றாக்குறையாகும்.

ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 91.16 சென்டி மீட்டர் மழையே பெய்திருக்கிறது. பருவமழை காலத்தில் மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதால் வறட்சி நோக்கி கேரள மாநிலம் செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் நீரை சேமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News