இந்தியா

நள்ளிரவில் 6 கொலைகள்: தம்பி குடும்பத்தோடு தாயையும் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்

Published On 2024-07-23 09:24 IST   |   Update On 2024-07-23 10:35:00 IST
  • தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்
  • சகோதர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அரியானாவில் தனது தாய் உட்பட குடுபத்தினர் 6 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நராய்கர் [Naraingarh] நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த கொலைகள் அரங்கேறியுள்ளது.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் அவர்களின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை உட்பட 6 பேரை பூஷன் குமார் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்து அவர்களை வீட்டில் வைத்தே எரிக்க முயற்சி செய்துள்ளார்.  தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்.  எனவே தந்தை சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பூஷனை கைது செய்துள்ளனர் . சகோதர்கள் இருவருக்கும் இடையில் 2.25 ஏக்கர்குடும்ப நிலம் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News