இந்தியா

15 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 கொடூரர்கள்

Published On 2025-06-01 17:24 IST   |   Update On 2025-06-01 17:24:00 IST
  • வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

கர்நாடகாவின் பெல்காமில் 15 வயது சிறுமி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிறுமியுடன் டிசம்பர் 2024 இல் இளைஞர் ஒருவர் நட்பு கொண்டார். பின்னர் அந்த இளைஞன் சிறுமியை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தான்.

அதை மொபைல் போன் கேமராவில் பதிவு செய்த அவன் வீடியோவை வைரலாக்குவேன் என்று மிரட்டி சிறுமியை மிரட்டி வந்தான்.

பின்னர் ஜனவரி 2025 இல், அதே நபர்களில் மூன்று பேர் மீண்டும் சிறுமியை வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த முறை பாதிக்கப்பட்ட சிறுமி தனது துயரத்தை குடும்பத்தினரிடம் கூறினார். குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று காவல் ஆணையர் போர்ஸ் பூஷன் குலாப்ராவ் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.   

Tags:    

Similar News