இந்தியா

மகாராஷ்டிராவில் சோகம் - லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

Published On 2023-09-10 22:23 IST   |   Update On 2023-09-10 22:23:00 IST
  • தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
  • விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் சமீபத்தில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News