இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 04:08 GMT

ஐதராபாத்தில் உள்ள மாநில கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டிற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.

2023-12-03 04:04 GMT

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ்ஜி கோவிலில் பாஜக எம்பியும், வித்யாதர் நகர் வேட்பாளருமான தியா குமாரி பிரார்த்தனை செய்தார்.

2023-12-03 04:00 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 10, மத்திய பிரதேசத்தில் 127, ராஜஸ்தானில் 100, சத்தீஸ்கரில் 33 ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

2023-12-03 03:57 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 61, மத்திய பிரதேசத்தில் 94, ராஜஸ்தானில் 86, சத்தீஸ்கரில் 55 ஆகிய இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

2023-12-03 03:54 GMT

மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரும், நரசிங்பூர் பாஜக வேட்பாளருமான பிரகலாத் சிங் படேல் தனது இல்லத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

2023-12-03 03:48 GMT

தெலுங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிஆர்எஸ் எம்எல்சியும், சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டார்.

2023-12-03 03:44 GMT

தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் 66 இடங்களில் தற்போது வரை முன்னிலையில் உள்ளது.

2023-12-03 03:40 GMT

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டனர்.

2023-12-03 03:35 GMT

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

2023-12-03 03:32 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 47, பாஜக-37 ஆகிய இடங்களில் முன்னிலை

Tags:    

Similar News