இந்தியா

யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேர் அதிரடி கைது

Published On 2023-04-10 00:41 GMT   |   Update On 2023-04-10 00:41 GMT
  • கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
  • யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன், தன்னிடம் 14 கிலோ எடையுள்ள யானை தந்தம் இருப்பதை உறுதி செய்தான். அதை ரூ.35 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அவன் போலீசாரிடம், தான் 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாகவும், சந்தனக்கடத்தல் வீரப்பன் உறவினர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், இன்னும் நிறைய யானை தந்தங்களை தன்னால் வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்தான்.

அவன் அளித்த தகவலின்பேரில், கும்பலை சேர்ந்த மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News