இந்தியா

இந்தியாவில் 28 கோடி பேர் கடனாளிகள் - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Published On 2025-07-23 08:51 IST   |   Update On 2025-07-23 08:51:00 IST
  • கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் உள்ள நபர்களுக்கே வழங்கப்பட்டவை.
  • குடும்ப நிதி சொத்துகள் ஜி.டி.பி.யுடன் ஒப்பிடும்போது, 2023-ல் 103.5 சதவீதம் இருந்தது. 2

இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இவர்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு எழுத்து பூர்வமாக பதிலளித்தது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி கிரெடிட் தகவல் நிறுவனமான சிபில் தெரிவித்ததின்படி, இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான சராசரி கடன் ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 2023-ல் ரூ.3.9 லட்சமாக இருந்தது. ஆனால் இது மொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொண்ட சராசரி கடன் அல்ல. மேலும், இந்த கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் உள்ள நபர்களுக்கே வழங்கப்பட்டவை. அவர்கள் பெரும்பாலும் சொத்து உருவாக்க குறித்த கடன்களையே எடுத்துள்ளனர்.

குடும்ப நிதி சொத்துகள் ஜி.டி.பி.யுடன் ஒப்பிடும்போது, 2023-ல் 103.5 சதவீதம் இருந்தது. 2024-ல் 106.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இது மக்கள் நிதி நிலை மேம்பட்டிருப்பதை காட்டுகிறது. இந்தாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.61.47 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 10.1 சதவீதம் அதிகம். ஆனாலும், வெளிநாட்டு கடன் ஜி.டி.பி. விகிதம் 19.1 சதவீதம் மட்டுமே என்பதால், இது சீராகவே கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News