இந்தியா
null

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசை: இந்தியாவிலிருந்து 54 கல்வி நிறுவனங்கள்.. ரேங்க்-கில் முன்னேறிய IIT டெல்லி

Published On 2025-06-20 06:39 IST   |   Update On 2025-06-20 06:42:00 IST
  • கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்தது.
  • ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது.

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் டெல்லி IIT பட்டியலில் டெல்லி IIT 123வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 27 ரேங்க் முன்னேறி இந்த வருடம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு புதிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்கா (192), இங்கிலாந்து (90) மற்றும் சீனா (72) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது அதிக பிரதிநிதித்துவ நாடாக மாறியுள்ளது.

இதற்கிடையில், ஐஐடி பாம்பே 2025 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த தரவரிசையான 118 இலிருந்து 129 வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News