இந்தியா
திருப்பதி கோவில்

திருப்பதி உண்டியலில் வசூலான வெளிநாட்டு பணம் இ.டெண்டர் மூலம் ஏலம்

Published On 2022-05-30 05:35 GMT   |   Update On 2022-05-30 05:35 GMT
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் அடுத்த மாதம் இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.
திருப்பதி:

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் அடுத்த மாதம் (ஜூன்) 16 மற்றும் 17-ந்தேதிகளில் இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதர விவரங்களுக்கு gmauctionsttd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala.org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News